ஒளவை ஆத்திசூடி

• அ- அறம் செய்ய விரும்பு
• ஆ- ஆறுவது சினம்
• இ- இயல்வது கரவேல்
• ஈ- ஈவது விலக்கேல்
• உ- உடையது விளம்பேல்
• ஊ- ஊக்கமது கைவிடேல்
• எ- எண் எழுத்து இகழேல்
• ஏ .ஏற்பது இகழ்ச்சி
• ஐ- ஐயம் இட்டுண்
• ஒ- ஒப்புரவு ஒழுகு
• ஓ- ஓதுவது ஒழியேல்
• ஓள- ஒளவியம் பேசேல்
• ஃ- அஃகஞ் சுருக்கேல்