கண்மணியே கண்ணுறங்கு – God natt sang

Ill: pixabay

 

 

ஆராரோ ஆராரோ
ஆரிவரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்காய்!

கண்ணை அடித்தாரார்
கற்பகத்தை தொட்டது யார்
அடித்தாரைச் சொல்லியழு
கண்மணியே கண்ணுறங்கு!

 

அண்ணன் அடித்தானோ
அனைத்தெடுக்கும் கையாலே
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே!

பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
மாமன் அடித்தானோ
மகிழ்ந் தெடுக்கும் கையாலே

ஆராரோ ஆராரோ
ஆரிவரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்காய்!