முத்தே பவளமே – God natt sang

Illustrasjon: Pixabay

 

 

முத்தே பவளமே- என்
முக்கனியே சக்கரையே
கொத்து மரிக் கொழுந்தே-என்
கோமளமே கண்வளராய்

கரும்பே கலகலங்க
கல்லாறு தண்ணிவர
கல்லாற்றுத் தண்ணியிலே
நெல்லா விளைஞ்ச முத்து

 

முத்திலே முத்து
முதிர விளைஞ்ச முத்து
தொட்டிலிலே ஆணி முத்து
துவண்டு விளைஞ்ச முத்து

தேடி எடுத்த முத்து
தேவாதி ஆண்ட முத்து
பாண்டி பதிச்ச முத்து
பஞ்சவர்கள் ஆண்ட முத்து

கொட்டி வைத்த முத்தே
குவித்து வைத்த ரத்தினமே
கட்டிப் பசும் பொன்னே-என்
கண்மணியே நித்திரை போ.