அன்புமிக்கத் தோழன் – Hund som bestevenn

Sangen handler om en hund som er en bestevenn

வீட்டு வாசல் காப்பவன்
வேட்டை ஆட வல்லவன்
ஆட்டுக்கிடைப் பாண்டியன்
அன்புமிக்கத் தோழன்!
உண்ட சோற்றை எண்ணி
உயிரும் விடத் துணிபவன்
மண்டலத்தில் நாய் போல்
வாய்த்த துணை உண்டோ!