பூனையார் – Sang om katter
Det er en sang om katter som er enkelt å forstå for små barn. Teksten er skrevet av den kjente forfatteren Thesikavinajakampillai.
மியாவ் மியாவ் பூனையார் மீசைக்காரப் பூனையார்
ஆளில்லாத வேலையில் அடுக்களைக்குச் செல்லுவார்
பாலிருக்கும் சட்டியை பார்த்துக் காலி பண்ணுவார்
இரவில் எல்லாம் சுத்துவார் எலிகள் வேட்டை ஆடுவார்
பரணில் ஏறிக் கொள்ளுவார் பகலிலங்கே தூங்குவார்
மெல்ல மெல்லச் செல்லுவார் மேலும் கீழும் தாவுவார்
லொல்லல் சத்தம் கேட்டதும் நொடியில் ஓடிப் பதுங்குவார்
மியாவ் மியாவ் பூனையார் மீசைக்காரப் பூனையார்