கதை கேளு!- Sang om et kokostre

Foto:Pixabay
பாப்பா பாப்பா கதை கேளு!
எனது கதையை நீ கேளு!
தேங்காய் விளைந்தால் விதையாவேன்
முளைத்து துளிர்த்து வளர்ந்தாலே
தென்னம்பிள்ளை நான் ஆவேன்
ஓங்கி வளர்ந்து உயர்ந்தாலே
தென்னை மரம் நான் ஆவேன்
தண்ணீர் உரமும் தந்தாலே
இளநீர் தேங்காய் நான் தருவேன்
மட்டை உதிர்ந்து விழுந்தாலும்
ஓலை கீற்றும் நான் தருவேன்
சேத்து மடிந்து போனாலும்
மரமாய் நானும் பயனாவேன்.