ஊக்கம் உயர்ச்சி தரும் – Kråka og krukka

Denne sangen handler om en kråke og en krukke

 

 

தண்ணீர் கிடையாமல் காகம் ஒன்று
தவித்து அலைகையிலே
மண்ணால் செய்த ஒரு சாடியினை
வழியில் கண்டதம்மா
சாடியின் மீதிருந்து தலையை
சரித்து நோக்கிடவே
சாடியின் அடியினிலே சற்றுத்
தண்ணீர் தெரிந்ததம்மா
காகம் உடன் எழுந்து சிறுசிறு
கற்கள் பொறுக்கி வந்து
ஊகமாய் சாடியினுள் அவற்றை
ஒவ்வொன்றாய் இட்;டதம்மா
இட்டிடவே நீரும் மேலே
எழுந்து வந்ததம்மா
தாகம்தீரக் குடித்து காகம்
தளர்ச்சி நீரந்;ததம்மா
ஊக்கம் உடையவர்க்கு துன்பம்
உலகில் இல்லையம்மா
ஆக்கம் பெருகுமம்மா இதை
நீ அறிய வேண்டுமம்மா!!