தோட்டம் – Sang om lek

Foto: PixabaySang om barn som elsker å danse og leke i hagen
தோட்டம் நல்ல தோட்டம்
நம்மை சொக்க வைக்கும் தோட்டம்
கூட்டமாக நாமும் ஒன்றாய்க்
கூடி ஆடும் தோட்டம்
பள்ளி முடிந்த உடனே முன்
பாய்ந்து ஓடி வருவோம்
புள்ளி மானைப் போல நாமும்
துள்ளிக் குதித்து மகிழ்வோம
வண்ண வண்ண மலரால் நம்மை
மலர வைக்கும் செடிகள்;
திண்ண திண்ண பழங்கள் மேலும்
திண்ணக் கொடுக்கும் மரங்கள்
கொஞ்சும் கிளியின் குரலும்
கருங்குயிலின் இசையும் அடடா
நெஞ்சை அள்ளுகிறது அதை
நினைக்கும் போதே இன்பம்
பட்டுப் போலே அழகாய்
புல் படர்ந்திருக்கும் தரையில்
விட்டுப் போக மனமே இல்லை
மிகவும் நல்ல தோட்டம்.