Madamløkken மழலையர் பள்ளியில் பன்மொழிக்கதை.
Forestilling på tamil
Bli med til Madamløkken barnehage i Oslo og se forestillingen av hatteselgeren på tamil og norsk.
ஒஸ்லோவிலுள்ள Madamløkken மழலையர் பள்ளியில்; பன்மொழிகளில் கதை கூறப்பட்டதுடன், பாடலும் பாடப்பட்டது. தொப்பி வியாபாரியும் சுட்டிக் குரங்கின் கதையானது சிறார்களை உரத்து சிரிக்க வைத்தது. இதனை சிறார்கள் மிகவும் விரும்பிக்கேட்டதுடன் தமது ஆர்வத்தiனையும் வெளிப்படுத்தினர். தமிழிலும், நோர்வேயிய
மொழியிலும் மாறி மாறி கூறப்பட்டதால் இக் கதையானது எந்த மொழியினுள் கூறப்பட்டது என சிறார்களால் ஊகிக்க முடியவில்லை.
வயதான பெண்ணிடம் வந்த அழையாத விருந்தாளிகள் என்ற பர்சிஸ் நாட்டுக் கதையினையும் சிறுவர்கள் விரும்பிக்கேட்டனர். நோர்வேயிய மொழியை நன்றாக புரியாத சிறார்கள் கூட செல்லப்பூனைக்குட்டியையும் பெரியபசுவைப் பற்றியும் கேட்கும் போது மிகவும் சுவாரிசியப்பட்டனர்.
சிறிய, சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய எறும்பு உலாச் சென்ற பாடலை சகல சிறார்களும் இணைந்து பாடினர்.
இவற்றை கேட்ட போது சில சிறார்களிற்கு விளங்கிக் கொள்ள முடிந்தது. சிலரிற்கு மற்றைய மொழி புரியாத போதும் நோர்வேயிய மொழியிலும் கூறப்பட்டதால் அனைவரிற்கும் விளங்கிக் கொள்ள முடிந்தது. தமிழ், பர்சிஸ்க், பிரஞ்ச் மொழிகளை நொஸ்க்குடன் சேர்த்துக் கேட்பது சிறார்களை பெரு மகிழ்ச்சியில் உட்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. மேற்குறிப்பிட்ட மொழிகளில் சில சிறார்கள் திறமையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கதைகளைக் கேட்க கீழேயுள்ள இணைப்பிணை அமத்தவும்.
Hatteselgeren – தொப்பிவியாபாரி