அசைந்தாடு – Sang om alfabetet

Ill:Pixabay
அசைந்தாடம்மா அசைந்தாடு
ஆசைக்கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றாய் அசைந்தாடு
ஈரக் குலையே அசைந்தாடு
உதய நிலாவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத்தோடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஓளவிய மின்றி அசைந்தாடு