எட்டா திராட்சை – Sang om en rev

Illustrasjon: PixabayHer finner du en sang om en rev
குட்டி நரி காட்டிலே
குதிச்சு குதிச்சு போனதாம்
அந்த நேரம் பார்த்துதான்
திராட்சை வாசம் வந்ததாம்
திராட்சை தின்னு பார்க்கவே
ஆசை கொண்டு நடந்ததாம்
திராட்சைத் தோட்டம் பார்த்ததும்
ஆசை அதிகம் ஆனதாம்
எட்டிப் பரிச்சு தின்னவே
எம்பி எம்பி பார்த்ததாம்
குள்ள நரியா னதால்
பரிக்க முடியாப் போனதாம்
எட்டா திராட்சை பார்த்துதான்
புளிக்கும் பழம் என்றதாம்
திராட்சை இன்றி போகவே
திரும்பி நடந்து சென்றதாம்.