தோல் கையுறை – Skinnvotten

Illustrasjon: PixabayFortellingen om skinnvotten på tamil 

அது ஒரு பனிக்காலம். மிகவும் குளிராக இருந்தது. ஒரு வயதானவர் தனது நாயுடன் காட்டிற்கு உலாப் போனார். அவரது கையுறை ஒன்று நழுவிக் கீழே விழுந்து விட்டது. வயதானவர் அதைக் கவனிக்கவில்லை. தனது நாயுடன் நடந்து போய்க் கொண்டே இருந்தார்.
அப்போது அவ்வழியால் சிறிய எலி ஒன்று வந்தது. “இன்றைக்கு நான் இந்தக் கையுறையில் இருக்கலாம்;” எனக் கூறியபடி கையுறைக்குள் சென்றது.

சிறிது நேரத்தால் ஒரு தவளை அவ்வழியே வந்தது. அது கையுறையைக் கண்டது. அதற்குள் யாரோ இருப்பதைக் கண்டது.|
யார் இந்தக் கையுறையில் வசிப்பது? என்று கேட்டது.
நான் சின்னஞ் சிறிய சுண்டெலி. நீ யார்? என எலி கேட்டது.
நான் தத்தித் தத்திப்பாயும் தவளை. நான் உன்னுடன் வசிக்கலாமா? எனத் தவளை கேட்டது.
ஆம். உள்ளே வா. என்றது எலி.
சூரியன் மறையும் நேரம் ஒரு சிறிய முயல் வந்தது. அது கையுறையின் முன் நின்றது.
யார் இந்தக் கையுறையில் வசிப்பது? என்று கேட்டது.
சின்னஞ் சிறிய சுண்டெலிஇதத்தித் தத்திப்பாயும் தவளை. நீ யார்? என்றன.
துள்ளித்துள்ளிப் பாயும் முயலார். நான் உங்களுடன் வசிக்கலாமா? எனக் கேட்டது.
ஆம். உள்ளே வா. என்றன.
இப்போ மூவர் கையுறையுள் இருந்தனர். கையுறை சூடாக இருந்தது.
இரவாகியதும் அவ்வழியே ஒரு நரி வந்தது. அது கையுறையின் முன் நின்றது.
யார் இந்தக் கையுறையில் வசிப்பது? என்று கேட்டது.
சின்னஞ் சிறிய சுண்டெலிஇ தத்தித் தத்திப்பாயும் தவளை. துள்ளித்துள்ளிப் பாயும் முயலார் நீ யார்? என்றன.
சிலு சிலுக்கும் வால் நரி. நான் உங்களுடன் வசிக்கலாமா? எனக் கேட்டது.
ஆம். உள்ளே வா. என்றன.
இப்போது நால்வர் கையுறையுள் இருந்து வெளியே பனிகொட்டுவதை இரசித்தனர்.
திடீரென அவ்வழியே ஒரு ஓநாய் வந்தது.
யார் இந்தக் கையுறையில் வசிப்பது? என்று கேட்டது.
சின்னஞ் சிறிய சுண்டெலிஇ தத்தித் தத்திப்பாயும் தவளை. துள்ளித்துள்ளிப் பாயும் முயலார் இ சிலு சிலுக்கும் வால் நரி. நீ யார்? என்றன.
பசியே அடங்காத ஓநாய். நான் உங்களுடன் வசிக்கலாமா? எனக் கேட்டது.
ஆம். உள்ளே வா. என்றன.
ஓநாய் இடித்துக் கொண்டு உள்ளே போனது.
இப்போது ஐவர் கையுறையினுள் இருந்தனர்.
சிறிது நேரத்தால் அவ்வழியே ஓர் காட்டுப்பன்றி வந்தது.
யார் இந்தக் கையுறையில் வசிப்பது? என்று கேட்டது.
சின்னஞ் சிறிய சுண்டெலிஇதத்தித் தத்திப்பாயும் தவளைஇ துள்ளித்துள்ளிப் பாயும் முயலார்இ சிலு சிலுக்கும் நரி பசியே அடங்காத ஓநாய். நீ யார்? என்றன.
கிண்டிக் கிளறும் காட்டுப்பன்றி. நான் உங்களுடன் வசிக்கலாமா? எனக் கேட்டது.
மெலிந்தவரானால் வசிக்கலாம். என்றன.
என்னால் உடலைச் சுருக்கிக் கொள்ள முடியும். என்றது காட்டுப்பன்றி.
அப்படியானால் உள்ளே வா. என்றன.
இப்போது அறுவர் கையுறையினுள் இருந்ததால் மிகவும் நெருக்கமாக இருந்தது. அவைகளால் அசையவே முடியவில்லை.
மரக்கொப்பொன்றினை முறியத்துத் தள்ளியபடி ஒரு கரடி வந்தது.
யார் இந்தக் கையுறையில் வசிப்பது? என்று கேட்டது.
சின்னஞ் சிறிய சுண்டெலி இதத்தித் தத்திப்பாயும் தவளை, துள்ளித்துள்ளிப் பாயும் முயலார்,
சிலு சிலுக்கும் வாலுடைய நரி,பசியே அடங்காத ஓநாய, கிண்டிக்கிளறும் காட்டுப்பன்றி.
நீ யார்? என்றன.
பென்னம்பெரிய கரடியார். நான் உங்களுடன் வசிக்கலாமா? எனக் கேட்டது.
இங்கு இடமே இல்லை. எங்களால் உன்னை உள்ளே விடவே முடியாது. என்றன.
எல்லோரும் நெருக்கி இருந்தால் இடமிருக்கும் என்றது கரடி.
அப்படியானால் நீ நன்றாக உன்னை சுருக்கிக் கொள்ள வேண்டும் என்றன.
கரடியும் இடித்துக் கொண்டு உள்ளே போனது.
இப்போது எழுவர் கையுறையுனுள் வசித்தனர்.
தனது கையுறையை தொலைத்து விட்டதை அப்போது தான் கவனித்தார் வயதானவர். மீண்டும் வந்த வழியே திரும்பி கையுறையைத் தேடி நாயும் வயதானவரும் வந்தனர்.
நாய் குரைத்த படியே முன்னே ஓடியது. “வவ் வவ்” என்ற நாயின் குரைக்கும் குரல் கேட்ட கையுறையுனுள் இருந்த மிருகங்கள் வெளியே ஓடி மறைந்து கொண்டன.
நாய் கையுறையைக் கண்டது. அதனை எடுத்து வந்து வயதானவரிடம் கொடுத்தது. கையுறை மிகவும் சூடாக இருந்தது. வயோதிபருக்கு ஒன்றுமே புரியாமல் நாயுடன் வீடு திரும்பினார்.