தாய் சொல்லைத் தட்டாதே – Sneglene

Illustrasjon: PixabayEn fortelling om snegler
ஒரு ஊரில் ஓர் அம்மா நத்தை தனது குட்டி நத்தையுடன் வசித்து வந்தது. ஓரு நாள் குட்டி நத்தை வெளியே சென்று விளையாட எண்ணியது. ஆனால் அதன் முதுகில் இருக்கும் ஓடு பாரமாக இருப்பதால் அதனை கழட்டி வைத்து விட்டு போக விரும்பியது.
தாய் நத்தையோ ஓட்டைக் கழட்டி வைக்க வேண்டாம் எனப் பல முறை குட்டியிடம் கூறியது. குட்டிநத்தையோ தாயின் சொல்லைக் கேட்காது தனது முதுகிலிருக்கம் ஓட்டை கழற்றி வைத்து விட்டு வெளியே விளையாடச் சென்றது.
நேரம் ஆக ஆக வெப்பமோ கூடத் தொடங்கியது. வெப்பம் கூடக்கூட குட்டிநத்தையால் சூட்டினைத் தாங்க முடியவில்லை. நடக்கவே முடியாமல் திண்டாடியது. அழுது கொண்டு ஓரு மாதிரியாக வீடு வந்து சேர்ந்தது.
தாய் நத்தை ஓடிச் சென்று அனைத்துக் கொண்டதுடன் குட்டியின் சூட்டினை ஆற்றியது. குட்டியும் தான் செய்த தவறையும் தாய் சொல் கேட்காது போனதால் வந்த துன்பத்தையும் எண்ணி வருந்தியது. அன்று முதல் தாய் சொல்லைத் தட்டுவதே இல்லை.