வீதி விதிகள் – Sang om trafikk regler

Illustrasjon: Pixabay
பள்ளி செல்லும் பிள்ளையே
பாடம் ஒன்று கற்றுக்கொள்
நல்ல சாலை விதிகளை
நன்கு மனத்துள் வைத்துக்கொள்
நடக்கும் பாதை வழியிலே
நாளும் நீயும் நடக்கணும்
கடக்கும் இடத்தில் கவனமாய்
கடந்து போகத் தெரியனும்
சிரித்துப் பேசி மகிழ்ச்சியாய்
சேர்ந்து நால்வர் சாலையை
மறித்துச் செல்லல் நல்லதோ?
மனதில் எண்ணிப் பாருங்கள்
வளைவில் பிறரை முந்தினால்
வந்து நிற்கும் விபத்துமே
அளவில்லாத வேகத்தால்
ஆபத்துண்டு தெரிந்து கொள்
பாதையில் பந்து பம்பரம்
பட்டம் போன்ற விளையாட்டு
வேதனை தருமே யாருக்கும்
வேண்டா இவற்றைத் தவிர்த்திடு
வீதி விதிகள் பேணிநிதம்
விரும்பும் இடமே போய் வரலாம்-
ஏதினி வீதியில் விபத்துக்கள்
எல்லாம் தவிர்த்தே மகிழ்வோமே.