ஒற்றுமை – Sang om vennskap og samarbeid

Foto: Pixabay
ஒற்றுமையாய் கூடுவோம்
ஒன்றாகவே ஆடுவோம்
உலகம் எங்கள் கையில் என்று
உரிமை கொண்டு பாடுவோம்
காற்றும் எங்கள் ஆணை கேட்கும்
கடலும் எங்கள் பாதம் நக்கும்
வேற்றுக் கிரகம் கூட எங்கள்
விழி அசைவைப் பார்த்து நிற்கும்
நேற்றி ருந்த மாந்தர் தந்த
நெறியை நன்கு போற்றியே
ஏற்றம் மிக்க மானு டத்தின்
எலும்பு நிமிரப் பாடு வோம்
எறும்பு போலச் சுறுசுறுப் பாய்
என்றும் வாழப் பழகு வோம்
இரும்பு போல உறுதி யான
இதயம் கொண்டு நிமிரு வோம்
யுத்தம் அற்ற உலகை ஆக்கும்
யுக்தி பெற்ற சிறுவர் நாம்
இரத்த வெறிப் பேய்கள் அற்ற
இனிய உலகை ஆக்குவோம்.