தாலாட்டுப் பாடல் – Vuggesang

Illustrasjon: Pixabay

 

 

வரம் கோடி வாங்கி வந்த அரும்பே
எங்கள் குலம் காக்க கையில் வந்த கரும்பே
உனக்காகத் தான் இந்த ஜென்மம் எடுத்தேன்
உயிருக்குள் உயிராக உன்னை நினைத்தேன்
எந்தன் உலகத்தை உன்னில் தானே கண்டு களித்தேன்
குயிலோசை மிஞ்சுதம்மா உந்தன் அழைப்பு
நெஞ்சைக் கொள்ளை கொண்டு போகும் உந்தன் முத்துச்சிரிப்பு
நடை போடும் போதே நல்லிசை நீயே
உனைக் கண்டு மயங்காதோர் யாரம்மா?
விளையாட்டுப் போதும் விரைந்து வரணும்
விழி மூடி நீயும் கண்கள் உறங்கணும்.